Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவோட இறுதி சடங்குக்கெல்லாம் வர முடியாது, அஸ்திய வேணும்னா கூரியர்ல அனுப்புங்க - மனசாட்யில்லாத மகளின் பேச்சு

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (11:04 IST)
தாயின் இறுதிச் சடங்கிற்கு வர அவரது மகள் மறுத்ததால், அக்கம் பக்கத்தினரே அந்த தாயின் உடலை தகனம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் திராஜ் பட்டேல்(70). இவரது மனைவி நிருபென் (65). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி ஆமதாபாத்தில் வசித்து வருகிறார். பக்கவாத நோயால் பாதித்த கணவரை நிரூபென் கவனித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று நிரூபென் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்தினார். தாய் இறந்த செய்தியை அக்கம்பக்கத்தினர் திராஜின் மகளுக்கு தெரிவித்தனர். அதற்கு அந்த அரக்கப் பெண்மணி கூறிய பதில் மறுமுனையில் பேசிய நபரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இறுதி சடங்கிற்கு வரதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்லை எனக் கூறிவீட்டு சட்டென இணைப்பை துண்டித்தார்.
 
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரே நிருபெனின் உடலிற்கு இறுதிச் சடங்குகளை எல்லாம் செய்து, தகனம் செய்தனர். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என பக்கவாதத்தால் பாதித்த திராஜ் கதறி அழுதார்.
 
பின்னர் அக்கம்பக்கத்தினர், திராஜின் மகளுக்கு போன் செய்து, உங்களின் தாயின் உடலை நாங்களே தகனம் செய்துவிட்டோம். அவரின் அஸ்தியையாவது வந்து வாங்கிச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் நேரில் வர முடியாது, வேணும்னா அஸ்தியை கூரியரில் அனுப்பி விடுங்கள் என கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் பேசியவர் எதுவும் பேச முடியாமல் போனை துண்டித்தார்.
 
கஷ்டப்பட்டு வளர்த்த தாயின் இறுதிச்சடங்கிற்கு கூட வர இஷ்டமில்லாத பெண்ணிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments