Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Mahendran
புதன், 1 மே 2024 (14:36 IST)
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிற்து.
 
அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா என்பது குறித்து விளக்கம் அளித்த  IMA துணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், கோவிஷீல்டின் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து அப்போதே ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
 
அதேபோல் கோவிஷீல்டால் ஏற்படும் பக்கவிளைவு என்பது மிகவும் அரிது என்றும், இந்தியாவில் ஒரு மில்லியன் டோஸ்களுக்கு 0.61 என்ற விகிதத்திலேயே பக்கவிளைவுகள் குறித்த வழக்கு பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

அடுத்த கட்டுரையில்
Show comments