Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்!!! ஆடிப்போன மணமகன்... கிளைமாக்சில் நடந்த சுவாரஸ்யம்....

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (13:21 IST)
கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமகள் வாந்தி எடுத்ததால் மணமகன் அந்த பெண்ணை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
 
திருமண வாழ்க்கையில் நுழைபவர்கள் தங்கள் துணை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நம்பினால் தான் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். அப்படி ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாததாலேயே இன்று பெரும்பாலான தம்பதியினர் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு வாசலில் நிற்கின்றனர்.
 
அப்படி கர்நாடகாவை சேர்ந்த சரத் என்ற வாலிபருக்கும், ரக்‌ஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். உணவு ஒவ்வாமை காரணமாகவே அவர் வாந்தி எடுத்ததாக கூறினார்.
 
ஆனால் இதனை நம்பாத மணமகன் சரத், ரக்‌ஷாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். நார்மல் செக்கப் தான் என ரக்‌ஷாவிடம் கூறிவிட்டு மருத்துவரிடம் ரக்‌ஷாவின் கன்னித்தன்மையை பரிசோதிக்க சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் ரக்‌ஷாவிற்கு தெரியவரவே ஆத்திரமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
 
பின்னர் ஒன்றும் தெரியாததுபோல ரக்‌ஷாவிடம் சென்று என்ன ஆனது என கேட்டுள்ளார் சரத். என்னை நம்ப தயாராக இல்லாதவனிடம் வாழமாட்டேன் என கூறிவிட்டார் ரக்‌ஷா. இதனால் கடுப்பான சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். தன் மீது சந்தேகப்பட்டு கேவலமான செயலை செய்ததாக பதிலுக்கு ரக்‌ஷா சரத் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்