Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றுக்குள் காற்றை நிரப்பிய சிறுவன்: மரணமடைந்த துயர சம்பவம்..

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (17:37 IST)
மத்திய பிரதேசத்தில், காற்றடிக்கும் பம்பு கொண்டு வயிற்றில் காற்றடித்த சிறுவன் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், நேற்று விடுமுறை என்பதால், சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த காற்று பம்பு ஒன்றை எடுத்து வந்து விளையாடினர். அப்போது அந்த சிறுவனும் விளையாட்டுப் போக்கில், தனது வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியுள்ளான்.

பின்னர் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போது, சிறுவனின் வயிறு வீங்கியுள்ளது. மூச்சு விடவும் திணறியுள்ளான். சிறுவனை விசாரித்த பெற்றோருக்கு, வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடியது தெரியவந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுவன் இறந்துவிட்டான்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சிறுவனின் தந்தையை விசாரித்தனர். அதன் பின்பு சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். வயிற்றுக்குள் காற்றடித்து விளையாடிய சிறுவன், வயிறு வீங்கி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments