Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி கோரக்பூராக மாறிய கர்நாடக கோலார்; 90 பச்சிளம் குழந்தைகள் பலி

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2017 (14:32 IST)
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் 90 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 

 
அண்மையில் உபி கோரக்பூர் பகுதியில் குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஸ்ரீ நரசிம்ம ராஜா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி தற்போது வரை 35 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளது.
 
இதையடுத்து விசாரணையில் கடந்த 8 மாதத்தில் 90 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:-
 
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் குறைந்த எடையுடன் பிறந்ததது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் ஆங்காங்கே பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் மீது சோதனை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வியாபாரம் மையமாக திகழும் மருத்துவ துறை தற்போது லாப நோக்கில் மட்டுமே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments