Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் தலையில் 77 ஊசிகள்..! மண்டை ஓட்டைக்குள் செலுத்தியது யார்.? அதிர்ச்சி தகவல்.!!

Senthil Velan
ஞாயிறு, 21 ஜூலை 2024 (16:41 IST)
ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. தீவிர தலைவலியால் அவதிப்பட்டதால் பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவரின் தலையை சிடி ஸ்கேன் மூலம் ஆராய்ந்ததில் மண்டை ஓட்டின் உள்ளே பல ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 22 ஊசிகள் வரை இருக்குமென்று கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை எடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வலி மேலும் தீவிரமடைந்ததால் அவரை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழன் (ஜூலை 18) அன்று சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
அங்கு நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவரது மண்டை ஓட்டிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நேற்று நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப்பட்டன.

ALSO READ: மத்திய அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை மறைக்க முயற்சிக்கிறாரா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சூனியம் செய்வதாகக் கூறி ரேஷ்மாவின் தலையில் ஊசிகளை செலுத்திய நபரான சாமியார் தேஜ்ராஜ் ராணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments