Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்..! மும்பையில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ..!!

Senthil Velan
புதன், 15 மே 2024 (08:41 IST)
மக்களவை தேர்தலையொட்டி மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நடைபெறும் வாகனப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்ரா மாநிலம் மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 13 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிராவில் இது இறுதிக்கட்ட வாக்குப்பதிவாகும். இதன் காரணமாக தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
 
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மும்பையில் வாகனப் பேரணி நடத்துகிறார். காட்கோபர் எல்.பி.எஸ் மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனப் பேரணி நடத்துகிறார். அப்போது பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார். 

ALSO READ: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு மே 20 வரை காவல் நீட்டிப்பு..!
 
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகனப் பேரணியின் காரணமாக எல்.பி.எஸ் சாலையில் காந்தி நகர் சந்திப்பிலிருந்து நௌபாடா சந்திப்பு வரையிலும், மஹுல்-காட்கோபர் சாலையில் மேக்ராஜ் சந்திப்பிலிருந்து ஆர்பி கடம் சந்திப்பு வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது என மும்பை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments