Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வு வினாத்தாளை லீக் செய்ய ரூ.50 லட்சம்.! மாணவர்களிடம் இடைத்தரகர்கள் வசூல்..!!

NEET

Senthil Velan

, திங்கள், 13 மே 2024 (15:42 IST)
நீட் தேர்வு வினாத்தாளை தேர்வுக்கு முன்பே கசிய விடுவதற்காக  தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத்தரகர்கள் வசூல் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
 
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. அந்த புகார் குறித்து அந்த மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 
தேர்வு நடந்த மே 5ஆம் தேதியே நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர் பாட்னா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வீடுகளில் இருந்து வங்கி காசோலைகள் உள்ளிட்ட பிற ஆவணங்களைக்  கைப்பற்றினர். ராம் கிருஷ்ணா நகரில் உள்ள லேர்ன் பாய்ஸ் விடுதிக்கு சுமார் 35 மருத்துவ மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

 
தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, இடைத்தரர்களிடம் பெற்ற வினாத்தாளும் தேர்வில் கொடுக்கப்பட்ட வினாதாதளும் ஒன்றாக இருந்ததாக கைதானவர்கள் ஒப்புக்கொண்டனர். நீட் தேர்வு வினாத்தாளை தேர்வுக்கு முன்பே கசிய விடுவதற்காக  தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி..! நெகிழ்ந்து போன சீக்கியர்கள்..!!