Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:15 IST)
மத்திய பிரதேசத்தில் மதிய உணவு உட்கொண்ட 50 பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல மதிய உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் உட்கொண்டனர். ஆனால்  சிறிது நேரத்திலேயே மாணவர்கள் அனைவரும் மயங்கி சரிந்தனர். இதனால் பதறிப்போன பள்ளி நிர்வாகம் 50 குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரமில்லா உணவை உட்கொண்டதே மாணவர்களின் மயக்கத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பரிமாறப்பட்ட உணவில் கூழாங்கற்கள் இருந்ததாக மாணவர்கள் கூறினர். மதிய உணவு உட்கொண்டு பள்ளி குழந்தைகள் மயக்கம் அடைந்தது குறித்து விசாரணை நடத்த தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments