Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதல்வருடன் நான்கு மாநில முதல்வர்கள் சந்திப்பு

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (21:07 IST)
டெல்லியில் நடைபெற்றுவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் தான் காரணம் என்றும், எனவே அவா் இந்த விவகாரத்திற்கு தீா்வு காண வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து  முதல்வா் அரவிந்த் கெஜரிவால், துணைமுதல்வா் மணிஸ் சிசோடியா, மூத்த அமைச்சா்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராஜ் ஆகியோர் கடந்த 6 நாட்களாக துணைநிலை ஆளுநா் அலுவலக வரவேற்பறையில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனா். 
 
ஆனாலும் துணைநிலை ஆளுனர் இதுவரை முதல்வரை சந்திக்க அனுமதி தரவில்லை. இந்த நிலையில் இந்த போராட்டத்தை மத்திய அரசு நாளைக்குள் முடித்து வைக்கவில்லை எனில் டெல்லியில் உள்ள வீடு வீடாக சென்று இது குறித்து மக்களிடம் தெரிவிக்கப்படும் என முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சற்றுமுன்னர் நான்கு மாநில முதல்வர்கள் நேரில் சந்தித்து அவருடைய போராட்டத்திற்கு நேரில் ஆதரவு கொடுத்துள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிரனாய் விஜயன் மற்றூம் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அதன் பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்று கெஜ்ரிவால் மனைவியையும் சந்தித்தனர். இந்த சந்திப்பு மூன்றாவது அணிக்கு அஸ்திவாரமாக அமையும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments