ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். அவர் கூறிவருவதாவது...
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு. ரெப்போ ரேட் 4.04 % லிருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்
ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை
உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம்
வங்கிக்கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் கூடுதல் கால அவகாசம்
தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 % ஆக குறைந்துள்ளது
இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது