'சக்கா ஜாம்' - பூதாகரமாக வெடிக்க போகிறதா விவசாயிகள் போராட்டம்?

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:27 IST)
விவசாயிகள் தங்களது போராட்டத்தை மேலும் வலிமைப்படுத்த 'சக்கா ஜாம்' போராட்டத்தை நடத்த உள்ளனர். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மேலும் வலிமையாக்க வரும் 6 ஆம் தேதி நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளனர். 
 
சக்கா ஜாம் என்றால் என்ன? 
சக்கா ஜாம் என்பது சக்கரங்களை நிறுத்துதல். அதாவது சாலை மறியல் போராட்டம் என இதனை கூறலாம். வரும் 6 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சக்கா ஜாம் போராட்டம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளதால் டெல்லியின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை 3 மடங்காக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது டெல்லி காவல்துறை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments