Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. 13 வயது சிறுவர்களின் கொடூர செயல்..!

Siva
வியாழன், 11 ஜூலை 2024 (14:54 IST)
ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் இந்த கொடூரத்தை செய்தது 12 மற்றும் 13 வயது சிறுவர்கள் என்றும் வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமியை மூன்று மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த மூன்று சிறுவர்களும் 12 முதல் 13 வயது உடையவர்கள் என்றும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது 
 
கடந்த ஞாயிறு அன்று 8 வயது சிறுமி பூங்காவின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த சிறுமியை ஏமாற்றி அருகில் உள்ள தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு தான் அவர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
 
பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி சிறுமியை கொலை செய்து வாய்க்காலில் பிணத்தை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல போன சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது இந்த கொடூர செயலை செய்தது 3  சிறுவர்கள் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்