Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 லட்சம் ஏ.டி.எம் கார்ட்களின் தகவல் திருட்டு: விசாரணையை துவக்கியது எஸ்பிஐ

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (21:21 IST)
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய 32 லட்சம் டெபிட் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடியது தொடர்பாக தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
 

 
நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கி எஸ்பிஐ [State Bank of India]. இதன் ஏடிஎம் மையங்களை தனியார் நிறுவனங்கள் நிர்வாகித்து வருகின்றனர். இவர்களில் சிலர் ரகசிய மென்பொருள் மூலமாக வங்கியின் பயனாளர் தொடர்பான ஏடிஎம் விவரங்களை திருடியுள்ளனர்.
 
இந்த தகவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்த 6 லட்சம் டெபிட் கார்டுகளை தடை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
 
டெபிட் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகாமையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல் ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான புதிய டெபிட் கார்டை விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.
 
ஏ.டி.எம் நெட்வெர்க்கிற்குள் இருந்த ஒரு தீய மென்பொருளே இதற்கு காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், டெபிட் கார்ட் தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: எலான் மஸ்க் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணமான பெண் புகார் அளிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி

"2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும்... பெ.சண்முகம் எச்சரிக்கை..!

விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? ஓபிஎஸ், சசிகலாவுக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments