Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானால் ஆபத்தில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்?

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:45 IST)
கோவிட் - 19 புதிய ஓமைக்ரான் மாறுபாட்டினால், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மருத்துவர் எச்சரிக்கை. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியை சேர்ந்த ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் குழந்தைகள் நல மருத்துவரான திரேன் குப்தா, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறியதாவது, கோவிட் - 19 புதிய ஓமைக்ரான் மாறுபாட்டினால், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். 11-12 வயதிற்குட்பட்ட நோயாளிகள் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அதிக அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். ஆனாலும் குறைந்த ஆபத்தில் உள்ளனர். டெல்டாவுடன் ஒப்பிடும் போது ஓமைக்ரான் மாறுபாட்டின் நோயாளிகளில் மேல் சுவாச அறிகுறிகள் அதிகம் காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments