Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டரை வயது சிறுமி பலாத்காரம்? கண்களை தோண்டி எடுத்து சிதைத்த கொடூரர்கள்

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (12:32 IST)
கடன் பிரச்சனையின் காரணமாக இரண்டரை வயது சிறுமியை கொன்று கண்களை தோண்டி எடுத்தது புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திர பிரதேச மாநிலத்தில் தப்பால் என்னும் பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் மகள் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் அதே பகுதியில் இருக்கும் ஷாகித் மற்றும் அஸ்லாமிடம் ரூ.10,000 கடனாக வாங்கியுள்ளனர். 
 
ஆனால், கடனை திரும்பி அடைக்க தாமதித்துள்ளனர், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அந்த தம்பதியினரின் மகள் திடீரென காணாமல் போகியுள்ளார். இது குறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்களாக தேடி வந்துள்ளனர். 
 
அப்போது மோப்ப நாய் கொண்டு தேடியதில் அந்த நாய் ஷாகித் மற்றும் அஸ்லாமின் வீட்டை சுற்றி வந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பெயரில் மோப்ப நாய் பட்டமிட்ட பகுதியை தோண்டிய போது சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர். 
 
சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போது சிறுமியி கண்கல் தோண்டி எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. 
 
மேலும் ஷாகித் மற்றும் அஸ்லாமை விசாரித்த போலீஸார், அந்த கொடூரர்கள்தான் கொலை செய்துள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர். கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் இவ்வாறு செய்ததாக அந்த கொடூரர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments