Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர்கள் 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2015 (08:51 IST)
ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.


 
 
ஜம்முகாஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டார் பகுதியில் தான் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடுத்தது. சிறியரக பீரங்கிகள், இயந்திர துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர்  நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
 
இரு தரப்புக்கும் இடையே சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தூப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் இந்திய எல்லைப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதனிடையே தாக்குதலில் தன் இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த  இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு   20 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திரமோடி வரும் 7ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்லவுள்ள நிலையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments