Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 195 கோடி பறிமுதல்: இரண்டாமிடத்தில் தமிழகம்

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:20 IST)
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய சோதனைகளில் சுமார் 195 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், ஆந்திர மாநிலத்தில் மட்டும் 118 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ள தமிழகத்தில், 18 கோடியே 31 லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 கோடியே 40 லட்சம் ரூபாயும், உத்தரப் பிரதேசத்தில் 10 கோடியே 46 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும் 70 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடத்தை விதிகளை மீறியதாக நாடு முழுவதும் 11ஆயிரத்து 469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
 
கறுப்புப்பண புழக்கத்தை தடுக்க வருமான வரித்துறை, சுங்கத்துறை, கலால் வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments