Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (11:13 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது செலவுக்கு கையில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. இந்நிலையில்  அடுத்ததாக 100 ரூபயையும் அரசு செல்லாது என அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
100 ரூபாய் நோட்டுகளை முடக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய 100, 150, 20 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மக்கள் கையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவுக்கு வந்த பிறகு அடுத்த வருட தொடக்கத்தில் 100 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments