'மனித கம்ப்யூட்டர்’ புகழ்பெற்ற கணித மேதை சகுந்தலா தேவி மரணம்!

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2013 (10:49 IST)
FILE
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கம்ப்யூட்டர்’ என புகழப்பெற்ற கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் நேற்று காலமாணார். அவருக்கு வயது 80.

தனது கணித ஆற்றலால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி, தனது ஆற்றலை 6 வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் நிரூபித்தார்.

1980- ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்த ார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

Show comments