Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்டிய மனைவியை கைவிட்ட மோடிக்கா உங்கள் ஓட்டு? -திக்விஜய்சிங் தாளிப்பு!

கட்டிய மனைவியை கைவிட்ட மோடிக்கா உங்கள் ஓட்டு? -திக்விஜய்சிங் தாளிப்பு!
, வியாழன், 10 ஏப்ரல் 2014 (16:59 IST)
கட்டிய மனைவியை கைவிட்ட நரேந்திர மோடியை நம்பி மக்கள் ஓட்டு போட முடியுமா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Modi
வதோதராவில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது தான் திருமணம் செய்து கொண்டதை மோடி ஒப்புக் கொண்டதும் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக்கில் அதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணை உளவு பார்த்த மோடி, இப்போது தனக்கு திருமணமானதை ஒப்புக் கொண்டுவிட்டார். மனைவியையே கைவிட்ட மோடி மீது எப்படி இந்த நாட்டு பெண்களுக்கு நம்பிக்கை வரும்?.
 
இந்த திக்விஜய்சிங்தான் கடந்த சில ஆண்டுகளாக மோடியின் மனைவி பற்றி அதிகம் பேசியவர். மோடி எங்கே உங்கள் மனைவி? உண்மையைச் சொல்லுங்கள் என்று விமர்சித்துக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil