Webdunia - Bharat's app for daily news and videos

Install App

' பெண் பார்த்துக்கொடுத்தால், வாக்கு உங்களுக்கு தான்' - வினோத கோரிக்கை

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2014 (12:11 IST)
நாடாளுமன்ற தேர்தல் துவங்கி மூன்றாவது கட்டமாக வாக்கு பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஹரியானா மாநில இளைஞர்கள் வாக்கு சேகரிக்க அவர்களது கிராமதிற்கு வரும் வேட்பாளர்களிடம், தங்களுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து கொடுத்தால், உங்கள் கட்சிக்கு வாக்களிகிறோமென வினோத கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.    
 
ஹரியானா மாநிலத்தில் ஆண்-பெண் வகிதம் குறைவாக உள்ளது. இந்த சமூக பிரச்சனையை முன்வைத்து வேட்பாளர்களின் கவனத்தை பெற, பிபிபூர் என்னும் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வாக்கு சேகரிக்க அவர்களது கிராமதிற்கு வரும் வேட்பாளர்களிடம், தங்களுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து கொடுத்தால், உங்கள் கட்சிக்கு வாக்களிக்கிறோமென தெரிவித்துள்ளனர்.   
 
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஹரியானா மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அம்மாநிலம் முழுவதும் சுமார் 3,50,000 ஆண்கள் திருமணம் செய்ய பெண்கள் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      
 
பெண் சிசுக்கொலை மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள இந்த மாநிலத்தில், இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், விரைவிலேயே மிக மோசமான பின்விளைவைச் சந்திக்க நேரிடும் என பிபிபூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சுனில் ஜக்லன் தெரிவித்துள்ளார். 
 
இந்த பிரச்சனையின் தாக்கத்தை தெரிவிக்க கிராமத்து இளைஞர்கள், “எங்கள் திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்” எனக் கூறினர். ஆனால், இந்த கோரிக்கைக்கு எந்த வேட்பாளரும் சரியான பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை.. மோசடி அதிகம் என எச்சரிக்கை..!

ஹரியானா பாஜகவுக்கு.. ஜம்மு காஷ்மீர் காங்கிரசுக்கு.. இதுதான் தேர்தல் முடிவா?

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அதிமுகவில் இருந்து நீக்கம்.. ஈபிஎஸ் அதிரடி

ஹரியானா தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி! - காங்கிரஸ் கொண்டாட்டம்!

Show comments