Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் ஆணைய உத்தரவிற்கு அடிபணிந்தார் மம்தா பானர்ஜி

தேர்தல் ஆணைய உத்தரவிற்கு அடிபணிந்தார் மம்தா பானர்ஜி
, புதன், 9 ஏப்ரல் 2014 (10:41 IST)
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், தேர்தல் ஆணையம் புதிதாக 7 அதிகாரிகள் நியமிப்பதை ஏற்றுக் கொள்வதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்
 
மக்களவை தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவவைத் தடுக்க, தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள், மேற்குவங்க மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், 5 காவல்துறை ஆய்வாளர்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த இடமாற்றத்தை செய்யப்போவதில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறிவந்தார்.
 
'மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், தான் முதலமைச்சராக இருக்கும்வரை எந்த அதிகாரியையும் மாற்ற மாட்டேன் என்றும், தேர்தல் ஆணையத்திற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. தேர்தல் ஆணையம் வேண்டுமானால், முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ளட்டும். எனக்கு பதவி மீது ஆசையில்லை'. என்று ஜமால்பூரில் மம்தா கூறினார்.
 
இந்நிலையில், இந்த அதிகாரிகளை மாநில அரசு இடமாற்றம் செய்யும் என்ற நம்பிக்கையுடன், தேர்தல் ஆணையம் காத்திந்தது. நேர்மையாக, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. அந்த அதிகாரிகள் மாற்றப்படவில்லை என்றால் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று தேர்தல் ஆணைய தகவல் வெளிட்டிருந்தது.
 
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஐந்து கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ஒப்புக் கொள்வதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil