Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் 4 ஆவது நாளாக ஊரடங்கு நீடிப்பு

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (13:22 IST)
மதக் கலவரம் வெடித்த ஹைதராபாத்தில் தொடர்ந்து இன்றும் நான்காவது நாளாக ஊரடங்கு நீடிக்கிறது.

பழைய ஹைதராபாத் நகரில் கடந்த சனிக்கிழமையன்ற ு, இரு பிரிவு மதத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்ததையடுத்து அதில் 2 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நகரின் பல இடங்களிலும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 3 தினங்களாக அமலில் இருந்த ஊரடங்கு, தொடர்ந்து இன்று நான்காவது நாளாகவும் நீடிக்கிறது.

நேற்றை நிலைமை அமைதியாக காணப்பட்டதையொட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இரண்டு மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இன்றும் நிலைமை அமைதியாக காணப்படுகிற போதிலும், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை இருப்பதை கவனத்தில் கொண்டு, தொழுகையின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகவே, ஊரடங்கு இன்றும் அமலில் உள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments