Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசல் விலை இன்று மூன்றாவது நாளாக குறைவு: ரூ.94க்குள் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (07:45 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாடு முழுவதும் உயராமல் ஒரே விலையில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக டீசல் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இன்று 3வது நாளாக டீசல் விலை குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்ததை அடுத்து ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.84 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான ரூபாய் 99.47 என்ற நிலையில்தான் விற்பனையாகி வருகிறது. மேலும் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து இந்த விலை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments