Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றம் கடிதல் ஓர் அலசல்

Ashok
சனி, 26 செப்டம்பர் 2015 (16:34 IST)
தேசிய விருது எப்படி இந்த படம் பெற்றது என்று சந்தேகம் அடைந்த அனைவரும், "குற்றம் கடிதல்" படத்தை தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய படமாகும், இந்த படத்தை இயக்கிய பிரம்மா முதல் படத்திலேயே சினிமாவில் தனக்குரிய ஸ்டைலில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளலாமல் வெளிப்படையாக குழந்தைகளுக்கு பாலியில் கல்வி அவசியம் என்பதை "குற்றம் கடிதல்" படத்தில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.


 


ஒரு படம் இப்படித்தான் இருக்கிறது எனத் தெரிந்த பின்னரும் அதை காசு குடுத்துப் போய் பார்த்துவிட்டு வெளியில் வந்து நல்லா இல்லை என்று சமூக வலைதளங்களில் போஸ்ட்கள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் படம்... அப்படி இருக்கிறது  என தேசிய, சர்வதேசியப் பட விழாக்களில் கொண்டாடப்பட்ட ஒரு படம் வெளியாகி நாம் பார்ப்பதற்கு இத்தனை மாதங்கள். . . இத்தனை போராட்டங்கள் !!!

இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் திரு. பிரம்மா அவர்களுக்கு நன்றி சொல்வதற்கு முன்னர் இத்தனை போராட்டங்களுக்குப் பின்னர் இதை வெளியிட்டு எல்லாரையும் பார்க்க வைத்த JSK சதீஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கலாம்.

"சென்னை போகுமா?.." என வாய்ஸ் ஓவரில் தொடங்கும் படத்தின் முதல் காட்சியிலிருந்து "தாய்" நாவலில் "மதிபபிற்குரிய ஆசிரியை மெர்லின் அவர்களுக்கு" எனக் கையெழுத்திட்டு முடிக்கும் கடைசி காட்சி வரை கவிதை!!! கையிலெடுத்துக் கொண்ட கதையை களம் மாறாமல், கமர்ஷியல் சேராமல், சமரசம் செய்து கொள்ளாமல் படத்தை இயக்கி படம் முடிந்து பார்வையாளனை எழுந்து நின்று கை தட்டி ரசிக்க வைத்த சரித்திர சாதனை இயக்குனருடையது.

குற்றம் கடிதல் உண்மையிலேயே வேற லெவல் படம் என்று கூட சொல்லலம். பாடல்களும் பாரதியார் பாடல்களாகவும், ஸ்கூல் ரைம்ஸ் பாடல்களாகவே வருவதால் கதையைத் தாண்டி ஒரு நொடிக் கூட வெளியில் மனம் போகவில்லை.

இந்தப்படம் பார்த்த பிறகு சினிமா பிரியர்களுக்கு தமிழ் சினிமாவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் தோன்றுகிறது. எதார்த்தம் மீறாத ஒவ்வோர் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தின் தனமையை அறிந்து அதை அப்படியே திரையில் காட்டிய நடிகர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

ஏறக்குறைய இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள்  எல்லாரையுமே மேடை நாடகங்களிலும், THEATRE FESTIVAL களிலும் நாம்மில் பலர் பார்த்திருக்கிறேம்

மெர்லின் டீச்சர், மணிகண்டன், பிரின்சிபல், அவர் மனைவி, செக்ஸ் கல்வி அவசியமெனப் பேசும் அந்த ஆசிரியை, கணவருடன் மாமியாருக்குத் தெரியாமல் படத்துக்குப் போகும் அந்த ஆசிரியை, ஸ்வீட் எடுத்துவிட்டு ஹேப்பி பர்த்டே சொல்லும் ஆசிரியர், செழியன், அவன் அம்மா, உதயன் பாத்திரத்தில் வரும் மைம் கோபி அவர்கள், மணிகண்டன் நண்பர்களாக வரும் சிங், பிரியங்கா, அந்த பெண் போலிஸ், பேஷன்ட்டுக்கு நீங்க என்ன வேணும்னு கேட்டுவிட்டு OUT என சொல்லும் அந்த டாக்டர், ப்ரஸ் மீட்டில் பேசும் கல்வி அதிகாரிவரை எல்லாமே அட்டகாசமான தேர்வு. அபாரமான இயல்பு மீறாத நடிப்பு.

எதார்த்தம் மீறாத கதைக்கு ஏற்ற ஒவ்வோர் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தின் தனமையை அறிந்து அதை அப்படியே திரையில் காட்டிய நடிகர்களும், கமர்ஷியல் கலப்படம் இல்லாமல் ஆக்கம் செய்த இயக்குனர்  பிரம்மா, விரைவில் இந்திய சினிமாவில் மாற்றத்தை உண்டாக்குவார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!