Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ நான் நிலா

Webdunia
பரதன ், ரவ ி, மேக்ன ா, ரகஸ்ய ா, கருணாஸ ், மணிவண்ணன ், மனோபால ா, பாலு ஆனந்த் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு-ராஜரத்தினம். இசை-தினா. கத ை, திரைக்கத ை, இயக்கம் எம்.பி.எஸ். சிவகுமார். தயாரிப்பு பரதன் பிலிம்ஸ்.

Webdunia
ராஜ ா, வினோத ், நிலா மூவரும் ஒரே கல்லூரி ஒரே வகுப்பு மாணவர்கள். இருவருடனும் சகஜமாகப் பழகும் நிலா மீது இருவருக்குமே காதல். நிலா யாரை விரும்புகிறார் என்று குழப்பம். காரணம் தனக்குப் பிடித்ததையெல்லாம் செய்கிறான் ராஜா என்கறிரன். எதையும் வித்தியாசமாகச் செய்பவன் வினோத் என்கிறாள். ஒரு கட்டத்தில் நீயா நானா போட்டியில் யாரைத்தான் நிலா காதலிக்கிறார் என்று கேட்கும் போது ராஜாவைத் தான் காதலிப்பதாகக் கூறுகிறாள். ஒரு முக்கோணக் காதல் கதை என்றால் இத்துடன் முடியவேண்டும். அல்லவ ா? ஆனால் பாதிப்படம் தான் முடிகிறது. பிறகு...? ராஜா-நிலா மோட்டார் சைக்கிளில் வேகமாக ஜாலியாகச் செல்ல விபத்துக்குள்ளாகிறார்கள். நிலா உயிர் பிழைக்கிறார். ராஜா இறந்துவிடுகிறான். இறந்த ராஜா ஆவியாக அலைகிறான். காதல் கதை ஆவியுலகக் கதையாக இடைவேளைக்குப் பிறகு நீயும் மாறுகிறது. நிலா தன்னையே நினைத்துக் கொண்டிருப்பதை எண்ணி ராஜாவின் ஆவி குற்ற உணர்ச்சியால் தவிக்கிறது. தன்னால்தான் வாழ்க்கையைக் கொடுக்க முடியவில்லை. நிலா மீது ஆசை வைத்துள்ள வினோத்துடனாவது சேர்த்து வைக்கலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்கிறது ராஜா ஆவி. நிலா மனதில் ராஜாவைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதை அறிந்த வினோத் நிலாவை அந்த ராஜாவுடனே சேர்ப்பதே சரியென்று முடிவெடுக்கிறான். ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்டு இறக்கச் செய்கிறான். இறந்த நிலா ஆவியாகி ராஜாவுடன் சேர்கிறாள். இறப்புக்குப் பின்னும் ஒன்று சேரும் காதல் கதையாக உருவாகியிருப்பதே "நீ நான் நிலா."

முக்கோணக் காதல் கதையில் புதிதாக என்ன சொல்லப் போகிறார்கள் என்று உட்கார்ந்தால் கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்து புதிய அணுகுமுறையில் கதை செல்வதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

படத்தின் பெரிய பலம் கலகலப்பு தான். முன் பாதியில் யதார்த்தமான காமெடி கொடி கட்டிப் பறக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் மனோபால ா, பாலு ஆனந்த ், கருணாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜாலிப்பட்டாசுகள். நாயகனின் நண்பனாக வரும் கருணாஸ் படம் முழுக்க செய்யும் ரவுசு ரசிக்க வைக்கிறது. ஆங்காங்கே காட்சிகளால் சிரிக்க வைத்தாலும் போதாது என்று அவ்வப்போது வசனங்களின் மூலமும் சிரிக்க வைக்கிறார்கள். பிற்பாதிப் படம் ஆவி சம்பந்தப்பட்டது என்றாலும் அதிலும் ஆவியாக அலையும் மணிவண்ணன ், சிரிக்க வைக்கிறார். கல்லுக்குள் ஈரம் ராமநாதன் செத்துப் பிழைப்பது கதை தளத்தோடு இணைந்த நல்ல கற்பனை.

ஆவிகள் சம்பந்தப்பட்ட பாதை பாதையில் கதை தடம் மாறினாலும் பலமுறுத்தாமல் ஜாலியாகப் போகிறது படம்.

இரு நாயகர்களும் புதுமுகங்கள் சுமாரானவர்கள். இருவருமே தி ர ¨க்கதையால் தான் நிற்கமுடிந்து இருக்கிறது. நாயகி மேக்னாவும் சுமார் ரகம் தான். அவரை நாகரிகமாகக் கையாண்ட ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு வசனங்கள் வலு சேர்க்கும் பலம். திரைக்கதையுடன் இணைந்து அவ்வப்போது பளிச்சிடுகின்றன. கதையோடு இணைந்த பளிச் ஒளிப்பதிவ ு, பட்ஜெட் படத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது. தினாவின் இசையில் பாடல்கள் கூடுதல் பலம். "உன்னை சந்தித்தேன்", "ஊரை மறந்தோம்" இரண்டும் மனதில் இழையும் இசை வடிவங்கள். சிம்பு பாடிய "ஒய்யாலே" குத்துப் பாட்டு சரியான கொத்துப் பரோட்டா. ரகஸ்யா ஆடும் "மதம் புடிச்ச" பாடல் தேவையில்லாத இலவச இணைப்பு. நன்றாக இருந்தாலும் எட்டு பாடல்கள் என்பது திகட்ட வைக்கிறது.

ஒரு முக்கோணக் காதல் கதையை தன் திரைக்கதை திறமையால் நிற்க வைத்துள்ளார் இயக்குநர். அதற்காக அவரைப் பாராட்டலாம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments