Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயன்

Webdunia
கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்த ா‌ரி வாலிபனின் கதை. புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்.

சிட்டியின் நெ.1 கடத்தல்காரர் பிரபு. அவரது ஒன் மேன் ஆர்மி ச ூர்யா. திருட்டு சிடி முதல் காங்கோ வைரம் வரை அலுங்காமல் அப்படியே கடத்தும் சாகசக்காரர்.

பிரபுவை எப்படியாவது வீழ்த்தி, கடத்தல் தொழிலில் தனியாவர்த்தனம் நடத்த ஆசைப்படுகிறார் வில்லன் ஆகாஷ் தீப் சைகல். அதற்கு தடையாக இருக்கிறார் ச ூர்யா. ஆகாஷின் தப்பாட்டங்களை சூர்யா தவிடுபொடியாக்க, ஒரு கட்டத்தில் அவர்களின் உயிருக்கே குறி வைக்கப்படுகிறது. இறுதியில் வில்லனின் வதத்துடன் சுபம்.
webdunia photoWD

கடத்தல், காதல் என்று சூர்யாவுக்கு இரு ட்ராக். இரண்டிலும் காமெடி இழையோட புகுந்து புறப்பட்டிருக்கிறார். உயிரைப் பணயம் வைத்து வைரம் கடத்துகிறார். சின்ன பதற்றம் வேண்டுமே? ம்ஹும்... படு கேஷுவல். இந்த கேஷுவல் கடத்தல் உலகின் தீவிரத்தை கொஞ்சம் குறைப்பதையும் சொல்லியாக வேண்டும்.

நண்பன் ஜெகன் எத ி‌ர ியின் உளவாளி என்பது தெ‌ரிய வந்ததும் சூர்யாவின் கோபமும் நடிப்பும் சூடு வைத்த ஆட்டோ மீட்டராக எகிறுகிறது. அதே கோபத்தை அவர் தனது காதலியும் ஜெகனின் தங்கையுமான தமன்னாவிடமும் காட்டும்போது திரைக்கதையில் புதிய வேகம்.

தமன்னா வழக்கமான காதலி. சூர்யாவின் அம்மாவின் கடைக்கு வந்து அவரையே கலாய்க்கும் காட்சியில் இருட்டுக்கடை அல்வாவாக இனிக்கிறார். ஆறுநாள் தாடியுடன் அமர்த்தலான வேடம் பிரபுவுக்கு. நெ.ஒன் கடத்தல்காரர் என்கிறார்கள். சூர்யாவையும், தானாக ஒட்டிக் கொண்ட ஜெகனையும், எடுபிடி கருணாஸையும் தவிர்த்து அவரது கடத்தல் கேங்கில் நான்காவது ஆள் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை.

படத்தின் மைனஸ் வில்லன். ஆகாஷ் தீப் சைகலின் உறுமல், செருமலில் பத்து வருட பழக்கம். போதை மருந்தை அவரது ஆட்கள் வயிற்றில் கடத்தும் காட்சியில் நமக்கு வயிற்றை கலக்குகிறது. ஜெகனின் வயிற்றை கிழித்து போதை மருந்தை எடுப்பது பகீர். கடத்தலின் தீவிரத்தை காட்டும் ஒரே காட்சி.

ஜெகன் நம்பிக் கெடுக்கும் உளவாளி. தொழிலில் இதெல்லாம் சகஜம், ஆனா, நீ என் நண்பன்ங்கிறது நிஜம் என்று சூர்யாவிடம் உருகும் நடிப்பு ஜே ார். தமன்னா - ச ூர்யா காதலுக்கு உதவுவது கொஞ்சம் ஓவர். காங்கோ கடத்தல் காட்சிகளில் எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம். பாடல் காட்சிகளில் குளிரவும், ஆ‌க்சனில் மிரளவும் வைக்கிறது ஒளிப்பதிவு. பாடல்கள் நன்றாக இருந்தும் கதையோட்டத்துக்கு தடை போடுகின்றன.

சண்டைக் காட்சிகள் படத்தின் ப்ளஸ். காங்கோ சேஸிங் காட்சியில் சீட் நுனியில் உட்கார வைக்கிறார்கள். கஸ்டம்ஸ் அதிக ா‌ரி பொன்வண்ணனுக்கு சூர்யா உதவும் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது புத்திசாலித்தனம். ச ூர்யாவின் அம்மாவாக ரேணுகா. ஆ‌க்சன் கதைக்கு நடுவில் மகன் மீதான அவரது அன்பை சொல்லியிருப்பது கிளைமாக்ஸில் ச ூர்யா கடத்தல் தொழிலைவிட ரொம்பவே உதவுகிறது.

வில்லனின் கணக்கராக வருகிறவர் திடீரென்று வில்லனுக்கு எதிராக திரும்புவது, அதற்கு காரணமாக அவரது மகளை வில்லன் நாசமாக்குவது போன்ற அரை டஜன் திடீர் காட்சிகள் திரைக்கதையை பலவீனப்படுத்துகின்றன.

அயன் - இரும்பு இல்லையென்றாலும் துரும்பில்லை.

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

Show comments