இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும், சனாதனத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்: அமைச்சர் உதயநிதி

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:08 IST)
இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
 
இந்த நிலையில் நெய்வேலியில் அமைச்சர் உதயநிதி கூட்டம் ஒன்றில் பேசியபோது சனாதனம் பற்றி நூறு ஆண்டுகளாக பேசி வருகிறோம். ஆனால் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தில் எதிராக குரல் கொடுப்போம். 
 
நான் பேசியதை இனப்படுகொலை என பாஜக திரித்து பரப்பியது. ஆனால் உண்மையிலேயே மணிப்பூரில் நடந்தது தான் இனப்படுகொலை என்றும் அதை கண்டும் காணாமல் கண்மூடி இருந்தவர் தான் பிரதமர் மோடி என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் 
 
இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும்  சனாதனத்தை எதிர்க்க குரல் கொடுப்போம் என்று உதயநிதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

அடுத்த கட்டுரையில்
Show comments