ஆனந்த தாண்டவம்

Webdunia
ஆஸ்கர் பிலிம்ஸ்சின் மற்றுமொரு பிரமாண்ட தயாரிப்பு. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாகியுள்ளது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் தொடராக எழுதிய பிரிவோம் சந்திப்போம் நாவலை தழுவி ஆனந்த தாண்டவத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா.
webdunia photoWD

நாவலின் தலைப்பையே படத்துக்கு வைப்பதாக இருந்தனர். கரு.பழனியப்பன் தனது படத்துக்கு பிரிவோம் சந்திப்போம் என்று பெயர் வைத்ததை தொடர்ந்து ஆனந்த தாண்டவம் பெயர் தேர்வு செய்யப்பட்டது.

காந்தி கிருஷ ்­ ணா சுஜாதாவின் தீவிர வாசகர். இவர் முதலில் தொடங்கி பாதியில் கைவிடப்பட்ட இன்ஜினியர் படத்தின் கதையும் சுஜாதாவினுடையதுதான்.

அமெரிக்க மாப்பிள்ளைக்காக உள்ளுர் காதலை உதாசீனப்படுத்தும் இளம் பெண்ணும், அமெரிக்காவில் இருந்தாலும் இந்திய மாப்பிள்ளையை தேர்வு செய்யும் இன்னொரு பெண்ணும்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள்.

கதையின் பெரும் பகுதி அமெரிக்காவில் நடப்பதுப் போல் எழுதப்பட்டிருப்பதால் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. புதுமுகம் சித்தார்த் ஹீரோ. தமன்னா, ருக்மணி ஹீரோயின். இவர்களுடன் சார்லி, மதன்பாப், கலைராணி, கிட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதியிருப்பவர் வைரமுத்து. ஒளிப்பதிவு ஜீவா சங்கர். கலை தோட்டா தரணி, எடிட்டிங் வி.டி.விஜயன்.

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

Show comments