Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரசாசனம்

Webdunia
சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நிற்பது. சிரஸ் என்ற வடமொழிச்சொல்லுக்கு தலை என்று பொருள்.

செய்முறை :

1. விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.

2. கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.

3. உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.

4. தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.

5. இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும் 100 எண்ணிக்கை இருந்தால் போதும்.

6. சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடி 100 எண்ணிக்கை செய்யவும்.

WD
7. மூன்று மாத பயிற்சிக்கு பிறகு சுவரை விட்டு விலகி அல்லது தனியாக செய்யலாம்.

8. 100 எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.

9. பிறகு சவாசனத்தில் படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.

எச்சரிக்கைகள்:

இந்த யோகாவிற்கு நீங்கள் புதிது என்றால் முதலில் சுவரின் துணையுடன் பயிற்சி செய்யவும். மேலும் தகுதி பெற்ற ஆசான் ஒருவரிடம் இந்த ஆசனத்தை கற்றுத்தேர்வதும் நல்லது.

அடிவயிறு மற்றும் முதுகெலுபு வலி இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பலன்கள் :

கற்பனை சக்தியை மூலதனமாகக் கொண்ட கலைஞர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் நிபுணர்கள், கம்பெனி நிர்வாகிகள், வேதாந்திரிகள் ஆகியோர் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பலனை அடையலாம். மூளை, கண், காது, மூக்கு, வாய் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான உயர் சத்துக்கள் தடையின்றி இரத்த ஓட்டத்தின் மூலம் பெறப்படுவதால் சீராகவும், சிறப்பாகவும் இயங்குகிறது. அதனால் அதை சார்ந்த நோய்களும் குணமடைகிறது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான நல்லதொரு சாதனமாக இந்த ஆசனம் உதவுகிறது. மூளை செயல்களிலுள்ள மூளை நரம்புகளில் தங்கியுள்ள நச்சுக்களை துரிதமாக வெளியேற்றுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீர்படுகிறது.

மூக்கில் வாசனையை உணரும் சக்தி மரத்துவிட்டவர்களுக்கு வாசனை உணரும் சக்தியை மீட்டு தருகிறது. தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். இரத்தம் சுத்தமடைகிறது. ஆதலால் ஞாபக சக்தி மன ஒருமைப்பாடு ஆகியவை அதிகரிக்கிறது. முகப்பொலிவு, நல்ல குரல் வளம் ஆகியவற்றை ஏற்படுத்க்துகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

Show comments