Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

Webdunia
புதன், 20 மே 2009 (11:54 IST)
ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், அதை செய்யக்கூடாது, இதை செய்யக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். கரு‌ச்‌சிதைவு ஆகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் இதற்கு காரணம்.

பொதுவாக கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, கர்ப்பமான முதல் மூன்று மாதம் பப்பாளி, அன்னாசி, பலா ஆகிய பழங்களை சாப்பிடுவதை தவிர்த்துவிட வேண்டும். உடல் சூட்டை அதிகப்படுத்தும் கோழி இறைச்சியையும் உட்கொள்ளக்கூடாது.

மேலும், முதல் 3 மாதங்களில் அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்த்து விட வேண்டும். நீண்ட தூர பயணமும் மேற்கொள்ளக்கூடாது. காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

இவற்றை எல்லாம் செய்யாமல் இருந்தால் கரு‌ச்‌சிதைவ ு ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து, பெண்கள் கருத்தரித்து இருந்தாலும் இய‌ற்கையாகவே கரு‌ச்‌சிதைவ ு ஏற் ப‌ட்டு ‌விடு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்க முடியாது.

கரு‌ச்‌சிதைவை‌த் தவிர்க் க, உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தை தவிர்த்திடுங்கள்.

இயற்கையான பழம் (மேற்சொன்ன பழங்களை தவிர்த்து), காய்கறிகள் சா‌ப்‌பிடலா‌ம். பழ‌ச்சாறு குடி‌க்கலா‌ம்.

தினமும் 3 அல்லது 4 டம்ளர் பால் கண்டிப்பாக குடிக்கவும்.

இதை பின்பற்றினால் எந்த பிரச்சினையும் இன்றி குழந்தையை பெற்றெடுக்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? முழுமையாக குணமாக்க முடியுமா?

Show comments