Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிற்கு அழகூட்டும் தொங்கு திரைகள்

வீட்டிற்கு அழகூட்டும் தொங்கு திரைகள்
, புதன், 30 நவம்பர் 2011 (17:59 IST)
வீட்டின் தொங்கு திரைகளை சுவற்றின் நிறம், சுவற்றிலுள்ள கலைப்பொருட்கள், மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அமைக்கவேண்டும். இதற்காக நீங்கள் ஒரு தொங்கு திரை நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை. தொங்கு திரைகளைத் தேர்ந்தெடுக்க இதோ சில குறிப்புகள்:

தொங்கு திரைகளைத் தேர்வு செய்யும்போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலில் சிந்திக்கவேண்டியது நமது பட்ஜெட் எவ்வளவு? மேலும் நாம் எவ்வளவு காலம் இந்தத் திரைகளைப் பயன்படுத்துவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வது நலம். முழு நீஅளமாக இருக்கவேண்டுமா, ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கவேண்டுமா, பட்டுத்துணீயால் அமைக்கப்படவேண்டுமா அல்லது சாதாரணத் துணியா என்பதை முடிவு செய்யவேண்டும்.

சிலர் வீட்டில் அடிக்கடி விருந்தினர்கள் வருவது வழக்கம் இவர்கள் தங்கள் வீடுகளில் ஆடம்பரமான தொங்கு திரைகளை அமைக்கலாம். அல்லது சாதாரணமாக மறைக்க மட்டுமே போதுமானது என்றால் சாதாரணத் திரைகளை வாங்கலாம் அல்லது வாடகைக்குக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து டிசைன், ஸ்டைல் ஆகியவற்றைத் தீர்மானிக்கவேண்டும். நிறம் அவசியமாக பரிசீலிக்கப்படவேன்டிய ஒன்று. பழங்கால கட்டிடங்கள், உயரமான மேற்கூரைகள் உள்ள வீடுகளில் பழங்கால ஓவியங்கள் உள்ள தொங்கு திரைகளை வாங்கலாம். நவீன காலக் கட்டிடங்கள் என்றால் பிளைனாகவோ அல்லது நவீனச் சித்திரங்கள் தீட்டப்பட்ட திரைகளை வாங்கலாம்.

சுவரின் நிறம், தரையின் நிறம், ஃபர்னிச்சர் நிறத்திற்கு ஒத்து வரும் திரைகளே அழகு சேர்ப்பதாக அமையும்.

நீங்கள் தேர்வு செய்யும் துணியின் மாதிரியை வாங்கி வீட்டின் சுவரில் வைத்துப் பார்க்கவும். இதன் மூலம் நல்ல தெரிவு சாத்தியமாகும்.

வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான நிறம், ஸ்டைலில் தொங்கு திரை தேர்வு செய்பவர்கள் அரிதுதான். ஹால், சாப்பாட்டு அறை, படுக்கை அறை, என்று அறைகள் அதிகம் இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே தொங்கு திரையைத்தான் தேர்வு செய்பவர்கள் அதிகம். அப்படி எடுத்தாலும் எல்லா அறைக்கும் பொதுவாக நன்றாகத் தோன்றும் துணியத் தேர்வு செய்யவும்.

உங்கள் ஜன்னல் கம்பிகள் என்ன டிசைனில் இருக்கிறது என்பதைப் பொறுத்து திரைகளை வாங்கவும், ஜன்னல் கம்பிகள் பூ டிசைனில் இருந்தால் பூ போட்ட டிசைன் திரை பொருத்தமாக இருக்கும். வெறும் கம்பியாக இருந்தால் பிளைன் திரை நன்றாக இருக்கும்.

தொங்கு திரைகள் வெறும் அந்தரங்கத்தின் குறியீடல்ல, புறத்தோற்றங்களின் கண்ணுக்கினிய அழகை கொடுப்பதுதான் திரைகள்.

Share this Story:

Follow Webdunia tamil