வீட்டில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டிய இடம் என்றால் அது சமையலறை தான். ஆனால் அதிக கிருமிகள் உருவாகும் இடமும் சந்தேகமின்றி சமையலறைதான்.
சமையலறையில் கிருமிகள் உருவாகக் காரணம், சமையலறையை சுத்தப்படுத்த போதுமான அக்கறை காட்டாததேயாகும்.
சமையலறையில் முக்கியமாக சிங்கும், கழிவுகள் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டியும் கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களாக உள்ளன.
சிங்குகளை தினமும் கிருமி நாசினி உபயோகித்து சுத்தப்படுத்த வேண்டும். குப்பைத் தொட்டியில் போடும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளை தினமும் இரண்டு முறை அப்புறப்படுத்த வேண்டும்.
எப்போதும் சிங்குகளில் பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்காமல் அவ்வப்போது கழுவி சிங்கை காய வைத்துவிட்டால் கிருமிகள் உற்பத்தியாவதை தவிர்க்க முடியும்.