குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.
தலை குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பினால் சிக்கு உடைப்பது நல்லது.
உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிப்பதைத் தவிர்க்கலாம்.
கூந்தலை பராமரிப்பதற்கென்ற அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.
சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும்.