Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (12:54 IST)
இந்த கோடைக்காலத்தில் உடல் நலத்தையும், அழகையும் பேணுவதற்கு என்று தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது அழகை பராமரிக்க எளிதான வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் நமக்குத் தெரிந்த சில குறிப்புகளை உங்களுக்காகத் தருகிறோம்.

வெள்ளரித் துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திருந்தால் தோல் குளிர்ச்சி அடையும்.

முகத்தில் அதிகமாக படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை நீக்க நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும் கற்பூரத் தைலத்தை தடவி ஊற வைத்து முகத்தைக் கழுவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

கோடை காலத்தில் வெயிலில் சுற்றுவதால் கழுத்து, கால் பகுதிகள் கருப்பாகும். இதனைத் தவிர்க்க பீர்க்கங்காய் கூட்டை வாங்கி குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம்.

தலைக்குக் குளித்ததம் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. மேலும் முடி உதிர்வதற்கும் காரணமாகிறது.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும். முகம் வட்ட நிலவாக மின்னும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments