Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அளவு தெரியாமல் பிராக்களை வீணடிக்கும் பெண்கள்

அளவு தெரியாமல் பிராக்களை வீணடிக்கும் பெண்கள்
, புதன், 2 மே 2012 (19:42 IST)
பிரிட்டனைச் சேர்ந்த பெண்களில் பாதிப்பேர் தாம் வாங்கும் ‘பிரா’க்களை பயன்படுத்துவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

webdunia
FILE
பிரிட்டனில் பிரா விற்பனை நிறுவனத்தால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக சுமார் 2000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, பிரிட்டன் பெண்களிடம் சராசரியாக 9 பிராக்கள் உள்ளதாகவும், ஆனால் அதில் பாதிக்கு மேல் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பெண்களில் பலர், ஷாப்பிங் செய்யும் ஆசையில் பிராக்களின் அளவு, வடிவம் என்பவற்றை கருத்தில் கொள்ளாமல் அவற்றை வாங்குவதாகவும் பின்னர் அவற்றை பயன்படுத்தாமல் ஒதுக்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் பிரிட்டனில் சுமார் 15.6 கோடி பிராக்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

74 விழுக்காட்டினர் பிராக்களை புதிதாக வாங்கும்போது அளவு பொருந்துமா என பரிசோதிப்பதில்லையாம். ஏனெனில் அவர்கள் மார்பகங்களை சரியாக அளவிடப்படுவது குறித்து சங்கடப்படுகின்றனராம்.
webdunia
மூன்றில் ஒரு பங்கு பெண்கள், பொருத்தமற்ற அளவு காரணமாக தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியுள்ளனர்.

அதேசமயம், அசவுகரியமாக, பொருத்தமற்ற துணிகளால் உருவாக்குதல், அணியும்போது அழகில்லாமல் தோற்றத்தை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால் பிராக்களை ஒதுக்குவதாகவும் சில பெண்கள் கூறியுள்ளனர்.

பல பெண்கள் தாம் தேர்வு செய்யும் பிராக்கள் உடலுக்குப் பொருத்தமில்லாமல் உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பத்தில் ஒரு விழுக்காடு பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான பிராக்களின் சரியான அளவு தெரியவில்லை.

மூன்றில் ஒரு விழுக்காட்டினர் சரியாக பிராவின் அளவை அளவிடாதவர்களாக உள்ளனர்.

74 விழுக்காட்டினர் பிராக்களை புதிதாக வாங்கும்போது அளவு பொருந்துமா என பரிசோதிப்பதில்லையாம். ஏனெனில் அவர்கள் மார்பகங்களை சரியாக அளவிடப்படுவது குறித்து சங்கடப்படுகின்றனராம்.

தற்போது தாம் அணியும் பிராக்கள் பொருத்தமாக இல்லை என நான்கில் ஒருவர் தெரிவிக்கின்றனர்.

அதிகமான பெண்கள் ஒரே அளவுடைய 3 பிராக்களை சுழற்சி முறையில் அணிவதுடன், பாதிக்கும் மேற்பட்டோர் வெவ்வேறு அளவுடைய பல வகையான பிராக்களை அணிவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 25 விழுக்காட்டினர் தமது மார்பகங்கள் பெரிதாக தோற்றமளிக்கச் செய்வதற்காக மிகவும் சிறிய அளவுடைய பிராக்களை அணிவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

57 விழுக்காடு பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடும்போது தாம் அணியும் பிரா பொருத்தமானதா என்பது குறித்து கருத்தில் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம் கூறும்போது, பெரும்பாலான பெண்கள் பொருந்தாத பிராக்களை வாங்கி பணத்தை வீணடிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள், அதிகமாக வேலை செய்யக்கூடியவர்கள் பொருந்தாத பிராக்களை அணிவதால், மார்பகங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

Article Summary:
British women are hoarding 156 million bras they don’t wear, new research has revealed. The average female owns nine bras, but more than half gather dust in drawers. The biggest reason for the pile up was because their bras were uncomfortable, according to a poll of 2,000. One in 10 did not know their size, while one in three had not been measured.

Share this Story:

Follow Webdunia tamil