Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக‌ளி‌ரி‌ன் பாதுகா‌ப்‌பி‌ற்காக மக‌ளிரே இய‌க்கு‌ம் கா‌ர்

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:25 IST)
முன்னோடித் திட்டமா க, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பெங்களூரில் மகளிர் இயக்கும் வாடகை கார்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய மகளிர் நலத் துறை அமைச்சகம் பர ி‌சீலனை செ‌ய்த ு வருகிறத ு.

இது கு‌றி‌த்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி தில்லியில் நே‌ற்று செய்தியாளர்களிடம் பேசுகை‌யி‌ல் தெரிவித்தார ்.

மேலு‌ம் அவ‌ர் பேசுகை‌யி‌ல், மங்களூரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் கவ‌ர்‌ச்‌சி நடனமாடிய பெ‌ண்களை தா‌க்‌கியவ‌ர்க‌ளை கைது செ‌ய்து அவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அதே நேர‌த்‌தி‌ல், இதுபோ‌ன்று ஆபாச நடன‌‌ங்களையு‌ம் ச‌ரி எ‌ன்று ‌ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று மா‌நில அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதையடு‌த்து உடனடியாக பெங்களூர் விடுதியில் இவ்வாறு ஆபாசமாக ஆடியதாக மும்பை, கோல்கத்தாவைச் சேர்ந்த பல பெண் களு‌ம ் கைது செய்யப்பட்டனர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், பெ‌ங் களூர் நகரில் பணிபுரியும் பெண்களைப் பாதுகாப்பதற்காக பெண்களே ஓட்டும் வாடகை கார்களை சோதனை அடிப்படையில் இயக்குவது குறித்து அரசு பரிசீலித்து வரு‌கிறது.

முதலில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு பெண்கள் இயக்கும் வாடகை கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அதையடுத்து படிப்படியாக ஐடி கம்பெனிகளுக்கும் பிபிஓ நிறுவனங்களுக்கும் பெண்கள் இயக்கும் வாடகை கார்கள் அனுப்பப்படும் என்று அமைச்சர் ரேணுகா தெரிவித்தார்

பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டம் பின்னர் தில்ல ி, ஹைதராபாத் ஆகிய ந கர‌ங ்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார ்.

மும்பையில் இந்த திட்டத்தின்படி 53 மகளிர் டாக்சிகள் வெற்றி கரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஓட்டுநர் சிறப்புப் பயிற்சி, கார் வாங்க விரும்பினால் அதற்கு வங்கிக் கடனுதவி போன்ற உதவிகளையும் அளிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

ஜலதோஷம், சளி பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Show comments