Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் அன்னைகள்!

Webdunia
ஞாயிறு, 11 மே 2008 (15:33 IST)
குடும்பத்தின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் உறுதுணையாக இருந்த அன்னைகளுடன், இந்த நாட்டிற்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய அன்னையர்களும் இந்த தினத்தில் நினைவில் கொள்ளத்தக்கவர்கள்.

அப்படி எடுத்துக் கொண்டால் ஏராளமான நிழற்படங்கள் நம் கண் முன் நிழலாடும். அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புதான் இங்கு உங்களுக்காக.

நாகம்மையார்

இவர் பெரியாரின் மனைவி. பெரியாருடன் சேர்ந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். விடுதலை போராட்டத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார்.

கஸ்தூரிபா காந்தி

கணவர் வழியில் சென்று தேசத்திற்காகப் போராடியவர். 1904 முதல் 1914ஆம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவில் தனது கணவருடன் வாழ்ந்த காலத்தில்தான் கஸ்தூரிபாவின் சமுதாய அக்கறை வெளிப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தென்ஆப்ரிக்காவில் பணியாற்றிய இந்தியர்களின் நிலைமையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கஸ்தூரிபா கைது செய்யப்பட்டு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடுமையாக பணியாற்றும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் முழு மூச்சில் இந்திய விடுதலைக்காகப் போராடிய கஸ்தூரிபா, எப்போதெல்லாம் காந்தி சிறையில் அடைக்கப்பட்டாரோ அப்போதெல்லாம் அவரது இடத்தில் இருந்து போராட்டங்களுக்குத் தலைமைதாங்கினார்.

தனிப்பட்ட முறையில் சுகாதாரமான, ஒழுக்கமான வாழ்வையும், படிக்கவும், எழுதவும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்.

தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையிலும், ஆசிரமத்திலும் பகிர்ந்து வாழ்ந்த கஸ்தூரிபா 1944ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

அருணா ஆசஃப் அலி

பிராமணக் குலத்தில் பிறந்து ஆசிரியராகப் பணியாற்றிய அருணா, காங்கிரஸ் தலைவர் ஆசஃப் அலி மீது காதல் கொண்டு குடும்பத்தையும், மதத்தையும் மீறி திருமணம் முடித்து அருணா ஆ ச ·ப் அலியானார்.

திருமணம் எ‌ன்பது இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்துவத‌ற்கான ஒரு க‌ரு‌வி. ஆனால் அருணாவின் திருமணம்தான் அவரை சமூக வாழ்க்கைக்கு கொண்டு வந்தது.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்ட அருணா 1931ஆம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவித்தார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளும் அருணா விடுதலை செய்யப்பட்டால்தான் தாங்கள் விடுதலையாவோம் என்று சிறைக்குள் போராட்டம் நடத்த, வெளியிலும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

வெளியில் வந்த அருணா, தீண்டாமை கொடுமைக்கு எதிராக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் வெளியில் வந்து தீவிரமாக விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய இளம் வீராங்கனை அருணா, 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவாலியா டேங் என்ற மைதானத்தில் நடத்திய கூட்டத்தில் முதன் முறையாக காங்கிரஸ் கொடியை ஏற்றி விடுதலைப் போராட்டத்திற்கான மிக முக்கிய அடியை எடுத்து வைத்தார்.

வாரிசு உரிமைக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்ம ை

மயிலாடுதுறை அருகேயுள்ள ஜானக ி தம்பதியினர் வறுமையால் தென் ஆப்பிரிக்கா சென்றபோது, 1898ல் பிறந்தார் வள்ளியம்மை. சிறுமியாக இருந்த போது, அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை கண்டு பொங்கினார்.

அப்போது அங்கு வந்த காந்தி, இந்தியர்களின் அடிமை நிலை கண்டு, அங்கேயே தங்கியிருந்து தனது போராட்டத்தை தொடங்கினார். அந்த இளம் வயதிலேயே காந்தியின் போராட்டங்களில் பங்கு கொள்ள தொடங்கினார் வள்ளியம்மை.

இந்நிலையில், கிறிஸ்துவ மத முறையில் அல்லாத திருமணங்கள் செல்லாது என திடீர் சட்டம் கொண்டு வந்தனர் பிரிட்டிஷார்.

இதனால், இந்துக்களின் திருமணம் செல்லாமல் போனது, இதன் காரணமாக பெண்கள் தங்களது மனைவி என்ற அந்தஸ்தை இழந்தனர். வள்ளியம்மை தனது வாரிசு உரிமையை இழந்தார்.

இதை எதிர்த்து காந்தியுடன் இணைந்து கடுமையாக போராட தொடங்கினார் வள்ளியம்மை.

ஜோஹனஸ்பர்க் நகரிலிருந்து வள்ளியம்மை தலையிலான ‘பெண் சத்தியாகிரகப் பட ை ’ நிய ூ காசில் நகருக்குச் சென்றது.

இதனால் பிரிட்டிஷார் வள்ளியம்மையை கைது செய்து 3 மாத கால கடுங்காவல் சிறையில் அடைத்தனர். சிறையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர், 1914ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அப்போது வள்ளியம்மையின் வயது 16.

மிக இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று, போராடிய வள்ளிம்மையின் தியாகம் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரையும் பெரிதும் பாதித்தது.

இதனாலேயே, ஜோஹனஸ்பர்க் நகரில் வள்ளியம்மை நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டது.

அவருடை ய போராட்டத்தின ் காரணமா க பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டமும் திரும்பப ் பெறப்பட்டது.

வள்ளியம்மை செய்த இந்த உயிர்த் தியாகம் தான், இன்று நாம் சட்டப்படி வாரிசுரிமை பெற முக்கியக் காரணம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments