Webdunia - Bharat's app for daily news and videos

Install App

து‌ப்பா‌க்‌கி‌ச்சுடு‌ம் வீராங்கனை அஞ்சலி பகவத்

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:08 IST)
விளையாட்டுத் துறையின் மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் அஞ்சலி பகவத் என்றதும் சட்டென அந்த முகம் நினைவுக்கு வந்துவிடும். ஆம், இந்தியாவின் அர்ஜூனன் என்று புகழப்படும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அஞ்சலி பகவத்தைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

ஜூடோ மற்றும் கராத்தேயிலும் தேர்ச்சி பெற்றுள்ள அஞ்சலிக்கு புகழ் வாங்கித் தந்தது என்னவோ துப்பாக்கிச் சுடுதல்தான்.

தற்போது 34 வயதாகும் அஞ்சலி பகவத், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடுதலில் முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

2002 ஆம் ஆண்டில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ஆ ஃப் சாம்பியன்ஸ் போட்டியில் பட்டம் வென்றார். இது சாதாரணமாக வென்றெடுத்த பட்டமல்ல... உலகின் தலைசிறந்த துப்பாக்கிச்சுடும் வீரர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு கடும் முயற்சியின் காரணமாகப் பெற்ற பட்டமாகும்.

இவர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெற்றதே ஒரு எதிர்பாராத சம்பவமாகும். அதாவது இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது என்.சி.சி.யில் இருந்த பல மாணவர்கள் முக்கியத் தேர்வு காரணமாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் சேர்ந்து ஊக்கப்படுத்தியதால் அந்த போட்டியில் அஞ்சலி பங்கேற்றார். இந்த வகையில்தான் துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சலிக்கு அறிமுகம் ஏற்பட்டது.

இந்தியாவில் மிகச் சிறிய அளவிலான விளையாட்டாகவும், உயர்தட்டு வர்க்க மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்த ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த துப்பாக்கிச் சுடுதல் மீது அப்போதுதான் அஞ்சலி பகவத்தின் பார்வை விழுந்தது.

webdunia photoWD
" அதுவரை எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பற்றி எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, ஆனால் எனக்கு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது, எனக்குள் திறமை இருப்பதை நான் உணர்ந்தேன ்" என்று அவர் கூறினார்.

அஞ்சலி பகவத்தின் திறமையை அறிந்து சஞ்சய் சக்ரவர்த்தியின் கீழ் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில் பட்டம் வென்று தனது முதல் அடியை எடுத்து வைத்தார். 2000ஆவது ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7வது இடத்தைப் பிடித்தார்.

இதற்காக, 2000ஆவது ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

துப்பாக்கிச் சுடுதலில் மிக வேகமாக முன்னேறினார் அஞ்சலி பகவத்.

அதன் முக்கிய பிரதிபலிப்பாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற்கு தேர்வான எட்டு இந்தியர்களி‌ல் அஞ்சலி பகவத்தும் ஒருவர். இ‌‌ந்த போ‌ட்டி‌யி‌ன் மூல‌ம் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குத் தேர்வான இரண்டாவது இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார் அஞ்சலி.

அடுத்ததாக 2002 மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் வெற்றிக் கொடியை நிலைநாட்டினார். அதற்காக அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது மத்திய அரசு.

இதுமட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா பிரதிஷ்தா விருது, சத்ரபதி விருது, மகாராஷ்டிரா கெளரவ் விருதுகளும் அஞ்சலிக்கு வழங்‌கி கெளரவிக்கப்பட்டன.

மும்பையில் பிறந்து வளர்ந்த அஞ்சலியின் தந்தை காப்பீடு நிறுவனத்தின் ஊழியர், தாய் கர்நாடக இசைப் பாடகி. துப்பாக்கிச் சுடுதலை அஞ்சலி பகவத் தேர்வு செய்ததும் பெற்றோர் தரப்பில் இருந்து முழு ஆதரவு கிடைத்தது. மேலும் அஞ்சலியின் கணவர் மாண்டர் பகவத் ஒரு பொறியாளர். அவரது முழு ஒத்துழைப்புடன் அஞ்சலி தனது முக்கியமான பல தருணங்களை எதிர்கொண்டுள்ளார்.

ஆ‌ண்க‌ள் ம‌ட்டுமே ஆ‌தி‌க்க‌ம் செலு‌த்‌தி வ‌ந்த ஒரு துறை‌யி‌ல் கொ‌ஞ்சமு‌ம் அ‌றிமுக‌ம் இ‌ல்லாத அ‌ஞ்ச‌லி பகவ‌த் சா‌தி‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர். இதுபோல பெ‌ண்க‌ள் ‌நினை‌த்தா‌ல் எ‌‌த்துறை‌யிலு‌ம் த‌ங்களது காலடியை‌ப் ப‌தி‌க்கலா‌ம். வரு‌ங்கால‌ம் உ‌ங்களை‌ப் ப‌ற்‌றிய வரலா‌ற்றை‌ப் படி‌க்க‌ச் செ‌ய்வோ‌ம்.

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

தூக்கத்தின்போது நள்ளிரவில் விழிப்பு வருகிறதா? என்ன செய்ய வேண்டும்?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோல் சார்ந்த பிரச்சனை.. தீர்வு என்ன?

Show comments