Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- சில தகவல்கள்

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:06 IST)
தனது அபார முன்னேற்றத்தால் உலக நாடுகள் அனைத்தையும் இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தியா.

சுதந்திரம் அடைந்தபோது வறுமையிலும், உணவுப் பற்றாக்குறையிலும் தள்ளாடிய நம் பாரதம், படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்று, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

தன்னிடம் உள்ள மனித வளத்தை சரியான வகையில் பயன்படுத்தி, உலக அளவில் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம் என்று தனது பங்களிப்பை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது.

இத்தகைய நமது இந்தியாவைப் பற்றி மேலும் சில தகவல்கள் உங்களுக்காக..

* தமிழரின் பெருமையை உலக்கு பறைசாற்றும் உலகப்பொதுமறை திருக்குறளை இப்புவிக்கு தந்தது தனது மாண்பை உயர்த்திக் கொண்டது பாரதம்.

* அகிம்சையின் வலிமையை முதன்முதலில் உலகுக்கு உணர்த்தியதும் நம் நாடு தான்.

* பூஜ்யத்தையும், எண் கணிதத்தையும் உலகுக்கு தந்தது இந்தியா தான். ஆர்யபட்டா தான் பூஜ்யத்தின் மதிப்பை கண்டுபிடித்தார்.

* கடந்த 10 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் வேறெந்த நாட்டையும் ஆக்கிரமிக்காது, அமைதி முறையை நாம் கடைபிடித்து வருகிறோம். ( ஆனால், பலரால் நாம் ஆக்கிரமிக்கப்பட்ட கதை வேறு!)

* உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. எந்தவித நெருக்குதலும் இன்றி நமது தேர்தல் ஆணையும் சுதந்திரமாகச் செயல்பட்டு, மிகப்பெரும் தேர்தலை எவ்வித குழப்பமுமின்றி வெற்றிகரமாக நடத்தி ஜனநாயகத்தின் மாண்பை போற்றி வருகிறது.

* உலகின் அதிக அஞ்சல் நிலையங்கள் இந்தியாவில் தான் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நாட்டின் எந்தவொரு மூலையில் இருந்தும், மற்றொரு இடத்திற்கு கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

* நாடு சுதந்திரம் பெற்றபோது 22653 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. 2000 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,53,454 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

* உலகிலேயே இரண்டாவதாக மிக அதிகமான பணியாளர்கள், நீண்ட ரயில் போக்குவரத்து, அதிக பயணிகள் என்று, நமது ரயில்வே துறை பெரியதொரு நிர்வாக அமைப்பாக இயங்கி வருகிறது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments