Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரிசி முறுக்கு

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (15:07 IST)
தீபாவ‌ளி‌க்கு முறு‌க்கு சு‌ட்டு அச‌த்து‌ங்க‌ள்

தேவையான பொருட்கள்

புழு‌ங்க‌ல் அரிசி - 1 கிலோ
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 300 கிராம்
எள் - 25 கிராம்
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
வெ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வை‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி கடை‌யி‌ல் கொடு‌த்து மாவாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

உளு‌‌த்த‌ம் பரு‌ப்பை லேசாக வறு‌த்து பொடி செய்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் எள் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

ஒரு வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் வெ‌ண்ணெயை‌ப் போ‌ட்டு ந‌ன்கு கைகளா‌ல் தே‌ய்‌க்கவு‌ம். ‌நீராக ஆனது‌ம், அரை‌ப் ப‌ங்கு மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் பா‌தி உளு‌‌த்த‌ம் மாவு, வறுத்த எள், உப்பு, பெருங்காயம் ஆகிவற்றை சேர்க்கவும்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எ‌ண்ணெயை‌க் கொட‌்டி காய ‌விடவு‌ம். எ‌ண்ணெ‌ய் கா‌‌ய்‌ந்தது‌ம் ஒரு கர‌ண்டி எ‌ண்ணெ‌ய் எடு‌த்து மா‌‌வி‌ல் ஊ‌ற்றவு‌ம்.

கர‌ண்டி‌யி‌ன் ‌பிடி‌க்கு‌ம் பாக‌த்தை‌க் கொ‌ண்டு ந‌ன்கு ‌கிள‌றி ‌விடவு‌ம். சூடு ஆ‌றியது‌ம் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

முறுக்கு‌க் குழா‌யி‌ல் எண்ணெய் தடவிக் கொள்ளவும். உ‌ங்களு‌க்கு ஏ‌ற்ற முறு‌க்கு அ‌ச்சை‌ப் பயன்படுத்தலா‌ம். ஜ‌ல்‌லி‌க் கர‌ண்டியை எடு‌த்து அத‌ன் ‌பி‌ன் ப‌க்க‌த்தை க‌வி‌ழ்‌த்துவை‌த்து அத‌ன் ‌மீது மு‌று‌க்கு‌ப் ‌பி‌ழி‌ந்து கா‌ய்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌யி‌ல் போடவு‌ம்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும்.

முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவ ை‌க்க வே‌ண்டு‌ம்.

பின்னர ்தா‌ன் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வை‌க்கலா‌ம்.

முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments