Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாப் ஜாமூன்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2009 (13:59 IST)
தீபாவளிக்கு எளிதாக செய்ய ஒரு இனிப்புப் பலகாரம்.

தேவையானவை
webdunia photo
WD


குலாப் ஜாமூன் பவுடர் - 1 பாக்கெட்
சர்க்கரை - 2 கப்
நெய் - கால் கிலோ
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

செய்யும் முறை

குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து உங்களுக்குத் தேவையான உருண்டை அல்லது நீள உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள்.

வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் கால் கிலோ நெய்யில் பாதியை ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு மரக்கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.

அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.

உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் மீதமிருக்கும் நெய்யையும் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 5 மணி நேரம் ஊறவிடவும்.

சுவையான குலாப் ஜாமுன் தயார்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments