பர்மா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் நமது நாட்டின் விடுதலைக்கு உதவிடும் நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கினர். இவற்றில் அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கதார் இயக்கம் மிக முக்கியமானதாகும். லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் (இந்திய தேச ராணுவத்தை நிறுவியவர்), சசீந்திர சன்யால், கணேஷ் பிங்காலே, ஷோகன் சிங் வாக்னா, தோஹி கத்தார்...