Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மி‌ழ் ஆ‌ய்‌வி‌ற்கு தகு‌தி வா‌ய்‌ந்தவ‌ர்க‌ள் இ‌ல்லை - கோவை ஞா‌னி வரு‌த்த‌ம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2010 (14:45 IST)
கோவ ை ஞான ி அறிமுகம ்!

WD
கோவ ை ஞான ி என்ற ு அறியப்படும ் க ி. பழனிச்சாம ி தமிழ ் ஆசிரியராகப ் பணியாற்றியவர ். கடந் த 50 ஆண்டுகளுக்க ு மேலா க தமிழ ் இலக்கியத்தில ் தீவி ர சிந்தனையாளராகவும ், கோட்பாட்டாளராகவும ், திறனாய்வாளராகவும ் இயங்க ி வருபவர ்.

தமிழின ் புதி ய இலக்கியங்கள ை மார்க்சி ய நோக்கில ் ஆராய்ந்தவர்களில ் முதன்மையானவர ். தமிழ ் நிலத்திற்கேற் ற தமிழ ் மார்க்சியம ் என் ற சிறப்பைச ் செய்தவர ் எ ன ஆய்வாளர்களால ் மொழியப்படுபவர ். நுட்பமா ன இலக்கி ய உணர்வும ், பேரிலக்கியங்களைத ் திறந் த மனதுடன ் அணுகும ் பண்பும ் கொண்டவர ். ‘நிகழ ்’ என் ற சிற்றிதழ ை தமிழில ் புதி ய இலக்கியத்திற்கா ன களமா க ப ல ஆண்டுகளா க நடத்த ி வந்தார ். இதுவர ை 24 திறனாய்வ ு நூல்களையும ் 12 தொகுப்ப ு நூல்களையும ் 4 கட்டுரைத ் தொகுதிகளையும ் 2 கவித ை நூல்களையும ் எழுதியிருக்கிறார ்.

இவருடை ய நீண் ட கா ல தமிழ்ப ் பணிக்கா க விளக்க ு விருத ு, தமிழ ் தேசியச ் செம்மல ் விருத ு, தமிழ ் தேசி ய திறனாய்வ ு விருத ு, பாரத ி விருத ு ஆகியவ ை வழங்கப்பட்டிருக்கின்ற ன. இவரின ் வாழ்நாள ் இலக்கியப ் பணிக்கா க கனடாவில ் இருந்த ு செயல்படும ் தமிழிலக்கியத ் தோட்டம ் இயல ் விருத ை வழங்கிச ் சிறப்பித்தத ு.

தமிழ க அரச ு நடத்தி ய செம்மொழ ி மாநாட ு குறித் த சர்ச்ச ை பரவலா க இருந் த நேரத்தில ், அதன ை சாதமாகப ் பார்த்த ு, செம்மொழ ி மாநாட்டில ் எதிர்பார்பத ு என் ன? என் ற தலைப்பில ் கோவையில ் ஒர ு கருத்தரங்க ை நடத்த ி, தமிழ ் மொழிக்க ு இன்றை ய நிலையில ் நாம ் செய் ய வேண்டியத ு என் ன என்பத ை ப ல ஆய்வாளர்களிடமிருந்த ு கட்டுரைகளைப ் பெற்ற ு அதன ை தொகுத்த ு வெளியிட்டார ்.

செம்மொழ ி மாநாட ு நடந்த ு முடிந்துவிட்டத ு. அத்தோட ு தமிழைப ் பற்றி ய பேச்சும ் நின்றுபோய்விட்டத ு என்ற ு கருதக்கூடி ய சூழலில ், செம்மொழ ி மாநாட ு குறித்தும ், அதனால ் தமிழிற்க ு ஏதாவத ு பயன ் ஏற்பட்டத ா என்பத ு குறித்தும ் தமிழ ். வெப்துனிய ா. காம ் தமிழறிஞர ் கோவ ை ஞானிய ை நேர்கண்டத ு.

தமிழ ். வெப்துனிய ா. காம ் இணையத்தளத்தின ் ஆசிரியர ் க ா. அய்யநாதன ், கோவ ை ஞானிய ை அவரத ு இல்லத்தில ் அக்டோபர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சந்தித்த ுச ் செய் த நேர்காணல ் இத ு.

WD
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம ்: கோயம்புத்தூரில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு முன்னால், இந்தச் செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறி ஜூன் மாதம் 13ஆம் தேதி கோவை அண்ணாமலை மன்றத்தில் நீங்கள் ஒரு இலக்கியக் கருத்தரங்கை நடத்தினீர்கள். அந்தக் கருத்தரங்கில் தமிழ் மலர் 2010 வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில், தாங்கள் நடத்திவரும் தமிழ் நேயம் இதழின் சார்பாக 'செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன?' என்கின்ற ஒரு அறிக்கையை புத்தமாக வெளியிட்டிருந்தீர்கள். இப்பொழுது மாநாடு முடிந்து அ‌தி‌ல் பல்வேறுபட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டைப் பொறுத்தவரை உங்களுடைய எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது?

கோவை ஞானி: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் பிரமாண்டமான அளவிற்கு பெரும் செலவில், 600 கோடி என்று சொல்கிறார்கள், சிலர் 1,000 கோடி என்று சொல்கிறார்கள், 300 கோடி என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. இந்த அளவிற்கு பெரிய செலவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களோடு பொதுமக்களுக்கு மிகச் சிறந்த மிகப் பெரிய அளவில் கண்காட்சி, ஊர்வலம் முதலியவற்றோடு அந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கலைஞர் நடத்தக்கூடிய மாநாடு என்பது இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டங்களோடு நடைபெறும் என்பதில் நமக்கும் ஒன்றும் வியப்பில்லை.

அதேபோல இவ்வளவு பெரும் தொகை செலவழிக்கப்பட்டதும் சற்ற அதிர்ச்சியாக இருந்தது. குறைந்த அளவிற்கு ரூ.300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த ரூ.300 கோடி ரூபாயை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவழித்திருக்க முடியும். பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இவைகளெல்லாம் மிகச் சிறப்பான முறையில் தமிழியல் ஆய்விற்காகவே தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். இவைகளுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக ஓயாமல் சொல்லப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.10 கோடி, 20 கோடி அல்லது 50 கோடி என்று ஒதுக்கியிருந்தாலும் கூட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ சிறப்பான முறையில் இன்னும் தங்களுடைய செயல்களை வரையறை செய்துகொண்டு திறம்பட செயல்பட முடியும்.

WD
ஆனால் அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய மிகப்பெரிய கோளாறு என்னவென்று சொன்னால், தமிழியல் ஆய்வு என்று சொல்லி ஒரு திட்டத்தை வகுப்பதற்கும், அதை நேர்மையான முறையில் உரிய முறையில் செயல்படுத்துவதற்கு தகுதியான அறிஞர் பெருமக்கள் தொகை இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. செம்மொழி நிறுவனத்தோடு செயல்படக்கூடிய இராமசாமி அவர்களோடு நான் பேசுகிறபோது, பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். யாரும் இல்லை என்கிறார் அவர். நான் ஒரு 10 தமிழ் அறிஞர்கள் பெயரைச் சொல்லிக் கூட அவரைக் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார், நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ஆனால், ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு அதையே முழு மூச்சான முறையில் அதில் ஈடுபட்டு செய்யக்கூடியவர்கள் என்று இவர்களில் எவரும் இல்லை என்று சொல்கிறார்.

இரண்டொருவர் விதிவிலக்காக இருக்கலாம். அந்த இரண்டொருவரை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய தமிழியல் ஆய்வு கொண்டு செல்வது என்பது மிக மிகக் கடினம், முடியாது. அப்ப நீங்கள் அரசு தரப்பில் என்ன பெரிய குறைபாடுகளைச் சொன்னாலும் கூட, உலக அளவிலான செம்மொழி என்பதைப் பற்றி மெய்ப்பிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ, தற்கால தமிழனுடைய நிலையை உயர்த்துவதற்கான ஆய்வுகளைச் செய்வதற்கோ தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு நமக்குள் பெரும்பாலும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் தங்களுடைய ஆய்வுத் திறனை பெருமளவு குறைத்துக்கொண்டார்கள்.

இன்று பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் செயல்படக் கூடிய பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம், பெரும்பாலானவர்கள் தமிழியல் ஆய்விற்கான தகுதியை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளவே இல்லை. வா.சொ.மாணிக்கம் என்று சொல்கிறோம், தெ.பொ.மீ. என்று சொல்கிறோம். இன்னும் பல முன்னாள் தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசுகிறோம். அ வ‌ ர்கள்தான் தமிழியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக முன் மாதிரியாக இன்று நமக்கு இருக்கிறார்கள். அவர்களைப் போல அவர்களுடைய நெறியில் தமிழியல் ஆய்வை மேம்பட்டு செலுத்துவதற்கான தகுதியோடு இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பலர் இல்லை.

அரிதாக அங்கொருவர், இங்கொருவர் என்று இருக்கலாம். ஆனால், அவர்களையெல்லாம் இந்த செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவரவே இல்லை. அவரவர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் இருக்கிறார்கள். சிலர் வயதான நிலையிலும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படியிருக்க, இந்த தமிழியல் ஆய்விற்கு தகுதியுடையவர்கள் என்று சொல்லித் தெறிவு செய்து, அவர்களை பல்லாண்டுகள் அந்தத் துறையில் ஈடுபடுத்தி வளர்ப்பதற்கான முயற்சி என்பதற்கான திட்டம் என்பது நமக்கு வேண்டும். அப்படியொரு திட்டம் தற்பொழுது இல்லை. உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் இதுபற்றி பேசப்பட்டதாகவும் இல்லை. இது ஒன்று.

இரண்டாவது, இந்தச் சொம்மொழி மாநாட்டில் உண்மையிலேயே கட ை‌ சியில் கலைஞர் அறிவித்தபடி, கணினி பற்றி பலவற்றை சொன்னார் அவர். பெரிய, மிகச் சிறந்த கண்காட்சியே நடத்தப்பட்டது. கணினி துறையில் எப்படியே 10, 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களில் இளைஞர்கள் ஒரு சிலர் பெரிய அளவில் ஈடுபட்டு மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறார்கள். அரசு ஆதரவு இல்லாத நிலையிலும், அரசு இந்த கணினி வளர்ச்சித் துறையில் ஈடுபட்ட நிலையிலும் அவர்களுடைய செயல்களெல்லாம் மிக வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தீர்களென்றால், கணினி என்று சொல்லக்கூடியது, கணினித் தமிழ் என்று சொல்லக்கூடியது மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறது. அதற்கான முறையில் சில உதவிகள், திட்டங்களையெல்லாம் அரசு வைத்திருப்பது, மாநாட்டில் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. உண்மைதான்.

மூன்றாவது, உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்விற்கு ஒரு தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைப்பதாக கலைஞர் பேசியிருக்கிறார். நிதி ஒதுக்கிடுவது முதலியற்றையெல்லாம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கான தொடக்க முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த உலகத் தமிழ்ச் சங்கம் எப்படி செயல்படாமல் இருந்ததோ, அதைப்போல இந்தச் தமிழ்ச் சங்கமும் செயல்படாமல் இருந்துவிட வேண்டாம். அதற்கான திட்டம் இல்லாத நிலையில் அதைப்பற்றி பெரிதாகப் பேசுவதற்கு இல்லை.

இன்னொன்று, உண்மையில் பார்த்தீர்களென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தமிழ் இப்பொழுது நுழைந்திருக்கிறது. பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால், இந்த மாதிரி மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் தமிழை நுழைக்க முடியும், அதற்கான தமிழ்க் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் நூல்கள், மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட பல நூல்களையெல்லாம் திறம்பட எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பொறியியல் துறையிலும், மருத்துவத் துறையிலும் தமிழைத் தொடங்கிவிட முடியும் என்று சொல்லி குறைந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அமைச்சர்களுக்கோ, முதல்வருக்கோ தெரியாத செய்திகள் அல்ல. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகவே, சொல்லப்போனால் 20 ஆண்டுகளுக்கிடையில் இதை புகுத்தியிருக்க முடியும். ஆனால், ஆங்கிலத்திற்கு பெருமளவு ஆதரவு, தமிழுக்கு மிகக் குறைந்த அளவிற்கு ஆதரவு ஏதோ அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய முறையில் தமிழைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய ஆங்கிலத்திற்குத்தான் இன்று வரையிலும் பள்ளி வட்டாரங்களில் முதன்மையான மரியாதை கொடுக்கிறார்கள். மெட்ரிக் பள்ளிகளை இவர்கள் கைவிட முடியவே முடியாது, கைவிட மாட்டார்கள். அதில் பெரிய முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பல அமைச்சர்கள் முதலியவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மெட்ரிக் பள்ளிகளெல்லாம் ஆங்கிலத்தை வளர்க்கிற நோக்கத்தோடுகள் பெரிய அளவிற்கு மிகவும் அதிகாரத் தோரணையோடு செயல்பட்டு வருகின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்தக்கூடிய திறனோ, தேவை என்ற உணர்வோ அரசிற்கு அறவே இல்லை. அதனால்தான் கடைசியாகக் கூட கோவிந்தராஜ் ஆணையம் அரசுடன் முரண்பட்டு நீதிபதி கோவிந்தராஜ் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார். அரசுடன் ஏன் முரண்பட்டார் என்று சொன்னால், மெட்ரிக் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த விரும்பவில்லை என்கிற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்தாக வேண்டும். அதனால்தான் அவர் விலகுகிறார். இதுபோன்று மெட்ரிக் பள்ளிகளை வைத்துக்கொண்டு நீங்கள் தமிழைக் காப்பாற்ற முடியுமா என்று சொன்னால் அது முடியாது. இதுவொரு பக்கம்.

சொல்லவந்த செய்தி என்னவென்று சொன்னால்....

தொடரு‌ம்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

Show comments