Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திருவையாறு நாளை ‌துவ‌ங்கு‌‌கிறது

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2009 (11:40 IST)
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், சென்னையில் திருவையாறு 5-வது ஆண்டு இசைவிழா வெ‌ள்‌ளி‌க்‌கிழமைய‌ன்று ஸ்ரீதியாகப்ரமத்தின் பஞ்சரத்ன கீர்த்தனை இசையுடன் தொடங்குகிறது.

இது பற்றி, லட்சுமண் ஸ்ருதி இயக்குநர் லட்சுமணன் கூறுகை‌யி‌ல், தஞ்சைத்தரணியில் அமைந்துள்ள திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி இசை ஆர்வலர்களும் இதில் கலந்து கொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

எல்லோராலும் எல்லா ஆண்டுகளிலும் திருவையாறு செல்வது இயலாது என்ற நிலையில், அப்படியொரு இசை விழாவை `சென்னையில் திருவையாறு' என்ற தலைப்பில் சென்னையில் நடத்துவது என்ற எண்ணத்தில் இந்த விழாவை தொடங்கினோம். இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி இசை ஆர்வலர்களும் இதை வரவேற்றனர்.

5- வது ஆண்டாக சென்னையில் திருவையாறு இசைவிழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் 18-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு மாம்பலம் சிவா குழுவினரின் நாதஸ்வரம் முதல் நிகழ்ச்சியாக இடம்பெற்று உள்ளது. 5 மணிக்கு மத்திய அமை‌ச்ச‌ர் ஜெகத்ரட்சகன் சென்னையில் திருவையாற ு இசை விழாவை தொடங்கிவைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, மூத்த இசைக்கலைஞர் பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி திருவையாறு ஆராதனை விழாவை நம் கண்முன்னே சென்னை காமராஜர் அரங்கில் கொண்டுவர உள்ளார்கள்.

எங்களுடைய லட்சுமண் ஸ்ருதி ம ிய ூசிக்கல்ஸ், நாடக அகாடமி, கலாலயா, ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த விழா, தினத்தந்த ி, ஹலோ எப்.எம்., கலைஞர் டி.வி., பாரத் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு இந்த இசை விழாவுக்கு கிடைத்து வரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, 25-ந் தேதி வரையில், 8 நாட்கள் இசை விழா நடக்கிறது. தினசரி காலை 9 மணி, 10.30 மணி, பகல் 1 மணி, 2.45 மணி, மாலை 4.45 மணி, இரவு 7.30 மணி என 5 நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

8 நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக சீசன் டிக்கெட்டும். தனித்தனியே அவரவர் விரும்பும் கச்சேரிக்கான டிக்கெட்டும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.

விழாவில், அருணா சாய்ராம், நித்தியஸ்ரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன், டாக்டர் கணேஷ் போன்ற பிரபல இசைக்கலைஞர்களின் கச்சேரிகளும், கதிரி கோபால்நாத் சாக்ஸாபோன், வலையப்பெட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் தவில் இசை, வயலின் கன்னியாகுமரி, கடம் கார்த்திக் போன்றோரின் கச்சேரிகளும், கிருஷ்ணகுமாரி நரேந்திரன் குழுவினரின் சிவசொரூப தாண்டவம் நாட்டிய நாடகம், ஷோபனா, மேக்னா முரளி உள்ளிட்டோரின் பரத நாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளோம்.

இவ‌ர்க‌ள் ம‌ட்டு‌மி‌ன்‌றி வளரும் கலைஞர்களும், வெளிநாடு வாழ் இந்தியர், வட நாட்டு இசைக்கலைஞர்களுக்கும் இந்த ஆண்டு வாய்ப்பு அளித்து உள்ளோம் எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments