Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் ஆமைகள் பற்றிய சில உண்மைகள்

Webdunia
திங்கள், 12 மார்ச் 2012 (16:32 IST)
ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது.

மேலும் கடல் ஆமைகளின் ஓடுகள், பல அடுக்குகளால் ஆன எலும்பு பிளேட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசத்தையும் உடையது. ஆதலால் ஓடுகள் எதையும் தாங்கும் வலிமையாக உள்ளது. ஆயினும் ஓட்டில் நரம்புகள் இருப்பதால் உணர்திறன் பெற்றுள்ளது.

ஆமைகளின் முதுகு மற்றும் விலா எலும்புகள் ஓட்டுடன் இணைந்திருப்பதால் இதனை ஓடுகளில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. மேலும் ஓடுகள் ஆமைகளுக்கு பாதுகாப்பாகவும் திகழ்கிறது.

லெதர்பேக் ( leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 540 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.

கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் ( Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments