Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக‌க்கவசம‌் அனைவரு‌க்கு‌ம் அவ‌சிய‌மி‌ல்லை

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (12:16 IST)
எ‌ங்கு பா‌ர்‌த்தாலு‌ம் முக‌க் கவச‌ங்களை அ‌ணி‌ந்து‌ள்ள ம‌னித‌ர்களாக வல‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் இ‌ந்த வேளை‌யி‌ல், பன்றி காய்ச்சலுக்கான முக‌க் கவச‌த்தை அனைவரும் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் துணைத்தலைவர் அஜய் காம்பீர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photo
WD
இது கு‌றி‌த்து அவ‌ர் கூறுகை‌யி‌ல், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்கள் மட்டும் சுவாச பாதுகாப்ப ு‌க்காக முக‌க் கவச‌த்தை பய‌‌‌ன்படு‌த்தலா‌ம்.

நுண்ணிய பொருட்களை வடிகட்டுவதற்கு 2 விதமான சுவாச முக‌க்கவ ச‌ங்க‌ள ் உள்ளன. அதில் ஒன்று என்-95 என்பதாகும். இது குளிர் காய்ச்சலுக்கு பயன்படுத்த விசேஷமாக தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முக‌க்கவசம‌், பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கவனித்து கொள்ளும் சுகாதார பணியாளர்கள் அணிவதற்கு உரியது ஆகும். இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. 24 மணி நேரம் வரைதான் பயன் அளிக்கும். அதன்பிறகு அதனை ப‌த்‌திரமாக அ‌ப்புற‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். சாதாரணமாக கு‌ப்பைக‌ளி‌ல் போடுவது‌ம் நோ‌ய் பரவலை அ‌திக‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம்.

இன்னொரு முக‌க் கவச‌ம ், மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துவதாகும். இது எந்தவிதமான நோய் கிருமியையும் தடுக்கும் தன்மை கொண்டது. இந்த முகமூடி 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே பயன் தருவதாக இருக்கும்.

எனவே விலை உயர்ந்த சுவாச பாதுகாப்பு முக‌க் கவச‌ங்கள ை பொதுமக்கள் வாங்கி அணிய வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கைக்குட்டை இருந்தால் கூட போதும். அதை முகத்தில் கட்டிக் கொள்ளலாம். ஆனால் அதை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை துவைக்க வேண்டும். அ‌ல்லது ஒரு முறை பய‌‌ன்படு‌த்‌தி‌ப் ‌பிறகு துவை‌த்து வெ‌யி‌லி‌ல் உல‌ர்‌த்த வே‌ண்டு‌ம்.

ஒவ்வொரு ‌ கிரு‌மியு‌ம் உங்களுடைய கை‌க்கு‌ட்டை‌யி‌ல் ஒரு மணி நேரம் வரை இருக்கும். கைகளில் 15 நிமிடங்கள் வரை இருக்கும்.

பெரியவர்களுக்கு நோய் எச்.1.என்1. வைரஸ் தொற்றினால் 7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் குழந்தைகளிடம் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். பன்றி காய்ச்சலுக்கு 48 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது சிறந்த பலனை தரும் எ‌‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments