இன்று ஆடம்பரப் பொருட்களில் முதலீடுகளை குறைக்கவும். இந்தக் காலங்களில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற பொறுப்புகளை ஏற்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு நண்பர்களால் இடையூறு ஏற்படும். அதிகாரிகளின் கெடுபிடிக்கும் வேலை பளுவிற்கும் இடையே அலுவலர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ரிஷபம்
இன்று இளம் தம்பதிகளுக்கு புத்திர விருத்தி ஏற்படும். தாய்மாமன் தங்களால் லாபம் அடைவர். குலதெய்வங்களின் பூரண அருள் கிட்டும் காலம். குடும்பங்களுக்குத் தேவையான பண வசதிகளுக்கு குறைவு இருக்காது. கணவனை இழந்த பெண்களால் முழு உதவி கிட்டும். வேலை இடங்களில் நடைபெறும் கலகங்களில் பங்கேற்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மிதுனம்
இன்று செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதையோ, சாலையை கடப்பதையோ தவிர்க்கவும். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்தி விடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்
இன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
சிம்மம்
இன்று பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை ஏளனமாக பார்த்த உயரதிகாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி வலிய வந்து பேசுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கன்னி
இன்று முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும். பெற்றோர் நலம் சிறப்படையும். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாக நிலை உண்டு. தசாபுக்தி சாதகமாக இருப்போருக்கு நற்பலன்கள் விரைந்து நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
துலாம்
இன்று எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
விருச்சிகம்
இன்று சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
தனுசு
இன்று சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். கவனம் தேவை. பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமான முடிவுக்கு வந்து சேரும். புதிய வழக்குகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். நிலம், வயல் ஏதேனும் வாங்க வேண்டி வந்தால் மனைவி பெயரிலும் அதை சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மகரம்
இன்று பெண்களுக்கு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம். உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கும்பம்
இன்று சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.மாணவர்களே! மறதி, மந்தம் நீங்கும். விளையாட்டை குறைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். வியாபாரிகளே, மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பெரிய முதலீடுகளை கடன் வாங்கி பண்ணாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மீனம்
இன்று எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பறையில் பாராட்டுகள் கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9