Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு

Webdunia
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சர்வதேச அமைப்பான `குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை' ( International charity Save The Children) வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் 60 விழுக்காடு குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.

டயரியா, நிமோனியா, மலேரியா, போன்ற குணப்படுத்தக் கூடிய நோய்களின் பாதிப்பினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கக்கூடியது என்று அந்த தகவல் கூறுகிறது.

வரும் 2015ஆம் ஆண்டிற்குள் தற்போதுள்ள குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையை மூன்றில் 2 பங்காகக் குறைக்க இந்திய அரசு உறுதியேற்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில், பங்களாதேஷ் வெற்றியடைந்திருப்பதாகவும், இந்தியாவைப் பொருத்தவரை பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments